Cricket update

ஆசிய சாம்பியன் பாகிஸ்தான் * பைனலில் கோட்டை விட்டது வங்கதேசம்

மிர்புர்: ஆசிய கோப்பை தொடரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை அணிகள் லீக் போட்டியுடன் வெளியேறின. பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதிய பைனல் இன்று மிர்புரில் நடக்கிறது. 
"டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், பவுலிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த நாசிர் ஜாம்ஷெட் 9 ரன்கள் எடுத்தார். சீனியர் யூனிஸ்கான் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் மிஸ்பா 13, உமர் அக்மல், ஹம்மது தலா 30 ரன்கள் எடுத்தனர். அப்ரிதி 32 ரன்கள் எடுத்தார். 
கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ் அகமது (46), சீமா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
தமிம் அபாரம்:
எட்டிவிடும் இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு நஜிமுதீன் (16) ஏமாற்றினார். தமிம் இக்பால் அரைசதம் (60) அடித்தார். நாசிர் ஹொசைன் (28), சாகிப் அல் ஹசன் (68), அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். முஷ்பிகுர் (10) நீடிக்கவில்லை. மொர்டசா (18) சற்று நம்பிக்கை தந்தார். 
மீண்டும் சாம்பியன்:
கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. சீமா வீசிய இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அப்துர் ரசாக் (6) போல்டானார். வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன் ஆனது.

Comments

Popular Posts